ஈரோட்டிலிருந்து ஊட்டிக்கு 34 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தைமேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற ஓட்டுநர் இயக்கிவந்தார். பேருந்து குன்னுார் ஊட்டி மலைப்பாதையில் பெரிய பிக்கட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரில் வந்த பேருந்துக்கு வழிவிட முயன்றார். அப்போது சற்றும் எதிர்பாராமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. பேருந்து தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது. சாலையோரத்தில் இருந்த பைன் மரத்தில் மோதி பேருந்து நின்றது. மரத்தால் தடுக்கப்பட்ட பேருந்து அந்தரத்தில் தொங்கியது . இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் தங்களின் வானங்களை நிறுத்திவிட்டு பேருந்தில் தவித்த பயணிகளை மீட்டனர்.
No comments:
Post a Comment