அரசியல், விளையாட்டு,உலகம், அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான செய்திகள் இடம்பெறும்.
Total Pageviews
Sunday, June 30, 2019
மரம்தான் எங்களை காப்பாற்றியது_பயணிகள் நெகிழ்ச்சி
ஈரோட்டிலிருந்து ஊட்டிக்கு 34 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தைமேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற ஓட்டுநர் இயக்கிவந்தார். பேருந்து குன்னுார் ஊட்டி மலைப்பாதையில் பெரிய பிக்கட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரில் வந்த பேருந்துக்கு வழிவிட முயன்றார். அப்போது சற்றும் எதிர்பாராமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. பேருந்து தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது. சாலையோரத்தில் இருந்த பைன் மரத்தில் மோதி பேருந்து நின்றது. மரத்தால் தடுக்கப்பட்ட பேருந்து அந்தரத்தில் தொங்கியது . இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் தங்களின் வானங்களை நிறுத்திவிட்டு பேருந்தில் தவித்த பயணிகளை மீட்டனர்.
சமூக வலைதளத்தில் உலா வரும் BiggBoss மீம்ஸ்கள்:
விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது , ஆரம்ப காலத்தில் வரவேற்பை பெற்றாலும் அடுத்து நடத்தப்பட்ட #bigboss2 மக்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை,மாறாக மக்களிடம் ஸ்கிரிப்ட் செய்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று தகவல் பரவியது அந்த செய்தி தற்போது #BiggBoss3 மூலம் உண்மையாகிள்ளது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடதுவதற்கு முன் நீதிமன்றத்தில் இந்த நிகழ்ச்சி (நடிகர்களை ஆபாசமாக காட்டுகிறார்கள்) குறித்து வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடதக்கது..
மேலும் நெட்டிசன் கள் இதை கிண்டல் செய்யும் விதமாக memes பதிவேற்றிவுள்ளனர்.
மக்கள் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முற்று புள்ளி வைபார்களா?
Live scores:Ind vs Eng
இந்திய அணி ஸ்கோர் அப்டேட்:: தற்போது வரை இந்திய அணி 31 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.#livescore
இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து ஐசிசி உலகக்கோப்பை போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிடையான ஐசிசி உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 337 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 338 ரன்கள் கொடுத்துள்ளது அதைத் தொடர்ந்து தற்போது இந்திய அணி வெற்றிக்கனியை பறிக்க விளையாடி வருகிறது.
#livescores
Subscribe to:
Posts (Atom)